அன்னூரில் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை

அன்னூர்,பிப். 7:  கோவை மாவட்டம், அன்னூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அன்னூர் நகர் பகுதியை கடக்க, காலதாமதம் ஏற்படுகிறது. இதனால்  பொதுமக்கள், அன்னூர் நகரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை அகலப்படுத்திட வேண்டும், என மாவட்ட ஆட்சியர் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறையினருக்கும், கோரிக்கைவிடுத்து வந்தனர். இந்நிலையில், நேற்று, அன்னூர் தேசிய நெடுஞ்சாலைத்துறை, அன்னூர் வட்டாட்சியர் சந்திரா தலைமையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி துவங்கியது. இதில் துணை தாசில்தார் நித்ய வள்ளி, வருவாய் ஆய்வாளர் ரேவதி, கிராம நிர்வாக அலுவலர் ஸ்டீபன் கென்னடி, தேசிய நெடுஞ்சாலை ஆய்வாளர் சுப்ரமணியம் மற்றும் நில அளவைத் துறையினர், இணைந்து நாகம்மாபுதூரில் அளவைப் பணி மேற்கொள்ள துவங்கி, அவிநாசி ரோட்டில் உள்ள தெற்குப் பகுதி வரை அளவீடு செய்யப்பட்டு, பெயிண்ட் மார்க் செய்யப்பட்டது. மேலும் இந்தப் பணி மேட்டுப்பாளையம் சாலையிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெறும் எனக் கூறினர்.

Related Stories: