கம்பம் நாகமணி அம்மாள் பள்ளி ஆண்டு விழா

கம்பம், பிப்.4: கம்பம் நாகமணி அம்மாள் நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 33வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு பள்ளி தாளாளர் காந்தவாசன் தலைமை வகித்தார். பள்ளியின் இணைச்செயலாளர் சுகன்யா காந்தவாசன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பள்ளியின் முன்னாள் மாணவரும், மதுரை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி டீன் சங்குமணி கலந்து கொண்டு அரசுப் பொதுத்தேர்வுகளில் சிறந்த இடங்களைப் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கினார். பள்ளி முதல்வர் புவேனஸ்வரி ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார்.பின் மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள், யோகா, கராத்தே, சிலம்பம் நடைபெற்றன. துணைமுதல்வர் லோகநாதன்  நன்றி கூறினார்.

Related Stories: