திருநங்கைகள் குறைதீர் கூட்டம் இன்று நடக்கிறது

தேனி, ஜூன் 21: தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்க உள்ளது. திருநங்கைகளுக்கு ஒரே இடத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கவதற்கு ஏற்ப, பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இம்முகாம் மூலமாக திருநங்கைகள் நல வாரிய அடையாள அட்டை, ஆதார் அட்டையில் திருத்தம், வாக்காளர் அடையாள அட்டை, முதலமைச்சர் ஒருங்கிணைந்த மருத்துவக் காப்பீடு திட்ட அட்டை, ஆயுஷ்மான்பாரத் அட்டை ஆகியவை பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, திருநங்கைகள் இந்த முகாமினை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா அறிவுறுத்தி உள்ளார்.

The post திருநங்கைகள் குறைதீர் கூட்டம் இன்று நடக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: