டிஒய்எப்ஐ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

தேனி, ஜூன் 23: தேனி நகர் பழைய பஸ் நிலையம் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமான டிஒய்எப்ஐ அமைப்பினர் நேற்றுமுன்தினம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா செயலாளர் நாகராஜ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின்போது, தமிழ்நாட்டில் விஷச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும், கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து பலர் பலியான சம்பவத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும், போதைக்கு எதிராக அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் முனீஸ்வரன், மாதர் சங்க மாவட்ட தலைவி மீனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post டிஒய்எப்ஐ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: