அணைக்கட்டு அடுத்த புலிமேடு கிராமத்தில் மாடுவிடும் விழாவில் சீறிபாய்ந்த காளைகள் 8 பேர் காயம்

அணைக்கட்டு, ஜன. 31: அணைக்கட்டு அடுத்த புலிமேடு கிராமத்தில் நடந்த மாடு விடும் காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின. இதில் எதிர்பாரதவிதமாக 8 பேர் மாடு முட்டி படுகாயமடைந்தனர். அணைக்கட்டு தாலுகா புலிமேடு கிராமத்தில் பொங்கல் பண்டிகையொட்டி காளைவிடும் விழா நேற்று நடந்து. விழாவை உதவி ஆணையர் (கலால்) பூங்கொடி விழாவை தொடங்கி வைத்தார். தாசில்தார் முரளிகுமார், துணை தாசில்தார் விஜயகுமார் தலைமையில் உறுதிமொழி ஏற்று கொண்டனர். காலை 10 மணியளவில் தொடங்கிய விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து 80 காளைகள் பங்கேற்றன. இந்த காளைகள் கால்நடை மருத்துவர்கள் பரிசோதனைக்கு பின்னரே ஒவ்வொன்றாக வாடிவாசல் வழியாக வீதியில் அவிழ்த்துவிடப்பட்டன. விழாவை காண புலிமேடு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டு விழாவை உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர். ஒவ்வோரு காளைகளும் 2முதல் மூன்று சுற்றுகள் வரை விடபட்டன. தொடர்ந்து விழா மதியம் 1.30 மணியளவில் முடிக்கப்பட்டது.

விழாவை வருவாய் ஆய்வாளர் நித்யா, விஏஓக்கள் சுரேஷ், தயாளன் மற்றும் வருவாய் துறையினர் கண்காணித்தனர். மேலும், இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் அரியூர் போலீசார் உட்பட 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சீறிபாய்ந்த காளைகள் முட்டியதில் பார்வையாளர்கள் 8 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு ஊசூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்து குழுவினர் சிகிச்சை அளித்தனர். அதில் படுகாயமடைந்த 70 வயது மூதாட்டி உட்பட 2 பேர் வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories: