தேர்தல் அலுவலர்களிடம் தகராறில் ஈடுபட்ட எஸ்ஐ சஸ்பெண்ட் வேலூர் எஸ்பி உத்தரவு வாக்கு இயந்திரங்களை கொண்டு சென்றபோது

வேலூர், மே 8: வாக்கு இயந்திரங்களை கொண்டு சென்றபோது, நாடாளுமன்ற தேர்தல் பணியில் இருந்த அலுவலர்களிடம் தகராறில் ஈடுபட்ட பாகாயம் போலீஸ் எஸ்ஐயை சஸ்பெண்ட் செய்து வேலூர் எஸ்பி மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19ம் தேதி ஒரே கட்டமாக நடந்தது. வேலூர் மாவட்டத்தில் துணை ராணுவ வீரர்கள் மற்றும் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களின் அதிரடிப்படை போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேர்தல் பணியில் தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்களை கொண்டு செல்ல ‘மொபைல் குழுக்கள்’ அமைக்கப்பட்டது. அதேபோல் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கும் மொபைல் குழுக்கள் அமைக்கப்பட்டது.

இதில் ஒரு குழுவில் பாதுகாப்பு பணிக்காக பாகாயம் காவல்நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் பணியில் இருந்தார். தேர்தலுக்கு முந்தைய தினத்தன்று மற்ற அலுவலர்களுடன் வாக்கு இயந்திரங்களை வாகனத்தில் கொண்டு சென்றார். அப்போது தேர்தல் பணியில் இருந்த மற்ற அலுவலர்களிடம் குடிபோதையில் அவர் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்படம் ஆதாரபூர்வமாக காவல்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் அன்றைய தினமே ேதர்தல் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக வேறு ஒருவர் பணியில் அமர்த்தப்பட்டார். இதனை தொடர்ந்து எஸ்பி மணிவண்ணன் உத்தரவின்பேரில் எஸ்எஸ்ஐ வெங்கடேசனிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அவர் அதிகாரிகளிடம் விளக்கம் அளித்துள்ளார். ஆனால் அவரது விளக்கம் போதுமானதாகவும், சரியானதாகவும் இல்லை என்பதால் அவரை சஸ்பெண்ட் செய்து எஸ்பி மணிவண்ணன் நேற்று உத்தரவிட்டார்.

The post தேர்தல் அலுவலர்களிடம் தகராறில் ஈடுபட்ட எஸ்ஐ சஸ்பெண்ட் வேலூர் எஸ்பி உத்தரவு வாக்கு இயந்திரங்களை கொண்டு சென்றபோது appeared first on Dinakaran.

Related Stories: