சாலையை சீரமைக்கக்கோரி மனு

மதுரை, ஜன. 29: மதுரை சர்வேயர் காலனியை சேர்ந்த சமூக ஆர்வலர் சுந்தரராஜ், கலெக்டர் வினயிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மதுரை மாவட்டம், மேலூர் முதல் திருப்பத்தூர் வரை செல்லும் மெயின்ரோட்டில், கீழையூர், ரெங்கசாமிபுரம், வீரகாளியம்மன், கோவில்பட்டி, கீழவளவு, இ.மலம்பட்டி மற்றும் கொங்கம்பட்டி விலக்கு, வழியாக மாநில நெடுஞ்சாலை செல்கிறது. இந்த ரோட்டில் கடந்த சில மாதங்களாக பெரும்பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. இந்த சாலையை செப்பனிடக் கோரி நெடுஞ்சாலைத்துறையிடம் பலமுறை புகார்கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை’’ என தெரிவித்திருந்தார். இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க கலெக்டர் பரிந்துரை செய்தார்.

Advertising
Advertising

Related Stories: