குளத்தூர் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

குளத்தூர்,ஜன.29: குளத்தூர் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி பலியானார். சாயர்புரம் செவத்தையாபுரத்தை சேர்ந்தவர் ஜெயபால் மகன் தர்மராஜ்(52) போர்வெல் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் சூரங்குடியில் உள்ள தனது உறவினரை பார்த்துவிட்டு குளத்தூர் அருகே உள்ள புளியங்குளத்தில் போர்வெல் பணிக்கு செல்வதற்காக நேற்று அதிகாலை 5மணிக்கு பைக்கில் சென்றார் இ.வேலாயுதபுரம் கிழக்கு கடற்கரைசாலையில் சென்ற போது பைக்கிலிருந்து நிலை தடுமாறி தவறி விழுந்து தர்மராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவலறிந்த சூரங்குடி போலீசார், தர்மராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: