பேரணாம்பட்டில் கிராம ஊராட்சி செயலருக்கான நேர்முகத்தேர்வு

பேரணாம்பட்டு, ஜன.29: பேரணாம்பட்டில் உள்ள பிடிஓ அலுவலகத்தில் கிராம ஊராட்சி செயலருக்கான நேர்முக தேர்வு நேற்று காலை நடைபெற்றது. பேரணாம்பட்டு ஊராட்சிகளில் காலியாக உள்ள கிராம ஊராட்சி செயலர் பதவிக்கான விண்ணப்பங்கள் கடந்த நவம்பர் மாதம் 8ம் தேதி பிடிஓ அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி குண்டலப்பள்ளி, எம்விகுப்பம் ஆகிய கிராமத்தில் காலியாக உள்ள ஊராட்சி செயலர் பதவிக்கு ஏராளமானோர் விண்ணப்பித்து இருந்தனர். இதையடுத்து நேற்று காலை பேரணாம்பட்டு பிடிஓ அலுவலகத்தில் நடைபெற்ற நேர்முகத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் கலந்து கொண்டனர்.
Advertising
Advertising

Related Stories: