ஈரோட்டில் சேலை விற்பனை கண்காட்சி இன்று நிறைவு

ஈரோடு, ஜன. 29:  ராஜஸ்தான் சேலை ஹவுஸ் நிறுவனத்தின் சார்பில் ஈரோட்டில் தொடங்கிய விற்பனை கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்த கண்காட்சியில் குறைந்த விலையில் ஆயிரக்கணக்கான டிசைன்களில் புடவைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு சத்தி மெயின்ரோடு வீரபத்திர வீதியில் உள்ள கணேஷ் மகாலில் ராஜஸ்தான் சேலை ஹவுஸ் நிறுவனத்தின் சார்பில், குறைந்த விலையில் சேலைகள் விற்பனை கண்காட்சி தொடங்கியது.

இந்த கண்காட்சியில் குறைந்த விலையில் ஆயிரக்கணக்கான டிசைன்களில் புடவைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனை கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது. இது குறித்து ராஜஸ்தான் சேலை ஹவுஸ் நிறுவனத்தின் நிர்வாகிகள் கூறியதாவது: பெண்கள் விரும்பும் வகையிலான பெங்களூர் டிசைனர் சேலைகள், மைசூர் டிசைனர் சேலைகள், மணிப்பூர், பனாரஸ் பார்ட்டி வேர் டிசைனர் சேலைகள், பந்தனி பிரிண்ட் சேகைள், இத்தாலியன் கிரிப் சேலைகள் என ஆயிரக்கணக்கான டிசைனில் சேலைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

 இக்கண்காட்சியில் ரூ.ஆயிரம் முதல் ரூ.2 ஆயிரம் மதிப்பிலான சேலைகள் ரூ.199க்கு விற்பனை செய்யப்படுகிறது. எங்களது நிறுவனம் தள்ளுபடி விற்பனை செய்வதன் நோக்கம் வரக்கூடிய பண்டிகை நாட்களுக்கு தேவையான புதிய சேலைகளை உற்பத்தி செய்வதற்காக மட்டுமே. மேலும் முன்னணி ஷோரூம்களில் விற்பனை செய்யப்படும் அனைத்து சேலைகளும் இங்கு குறைந்த விலையில் விற்கப்படுகிறது. ஒருவாரமாக நடந்த விற்பனை கண்காட்சி 29ம் தேதியுடன் (இன்று) நிறைவடைகிறது. காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த விற்பனை நடைபெறவுள்ளது. ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பெண்கள் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related Stories:

>