மேலூர் அருகே பள்ளத்தில் வேன் கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் காயம்

மேலூர், ஜன. 28: சிவகங்கை மாவட்டம், சக்குடி அருகே மணலூரில் தனியார் மெட்ரிக் பள்ளி உள்ளது. இப்பள்ளிக்கு சொந்தமான வேன், நேற்று காலை மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவியரை ஏற்றிக் கொண்டு பள்ளிக்கு சென்று கொண்டிருந்தது. மேலூர்-திருப்புவனம் சாலையில் பூஞ்சுத்தி அருகே, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய வேன், சாலையோரம் உள்ள ஆலமரத்தின் மீது மோதி, அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பூஞ்சுத்தியை சேர்ந்த ராஜாவின் மகன் வீரபாண்டியின் (8), இடது கை துண்டானது. அதே பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டியின் மகன் செந்தில்பாண்டிக்கு (11) தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த விபத்தில் காயமடைந்த மாணவ, மாணவிகள் 15 பேர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேன் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: