போக்குவரத்தை தடுக்க வலியுத்தல்

திருமங்கலம், ஜன. 28: குடியரசு தினத்தை முன்னிட்டு, திருமங்கலம் அருகே உச்சபட்டியில் கிராமசபை கூட்டம், தலைவர் பிச்சையம்மாள் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் விஜயகுமார், ஊராட்சி செயலர் ஈஸ்வரன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி ஒன்றிய உதவி அலுவலர் மகேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் பேசிய கிராம மக்கள், ‘கப்பலூர் டோல்கேட் சுங்க கட்டணத்தை தவிர்க்கும் வகையில் உச்சபட்டி கிராம சாலையை கனரக வாகனங்கள் பயன்படுத்த துவங்கியுள்ளன. இதனால் கிராம சாலை குண்டும், குழியுமாகிறது. மின்னல் வேக வாகனத்தால் விபத்துகள் உண்டாகின்றன. எனவே, கனரக வாகனங்கள் உச்சபட்டி கிராம சாலையை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மேலும், கிராமத்திற்கு மீண்டும் பஸ் வசதி, கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும், பொதுசுகாதார மைய கட்டிடம் கட்டி தர வேண்டும் என வலியுறுத்தி பேசினர்.

Advertising
Advertising

Related Stories: