மது விற்ற 27 பேர் கைது

மதுரை, ஜன. 28: மதுரை நகரில் அனுமதியில்லாமல் மது விற்பனை செய்த 27 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை நகரில் அனுமதியில்லாமல் மது விற்பனை செய்யும் நபர்களை கைது செய்ய போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டார். இதன்பேரில் நகர் போலீசார் மற்றும் மதுவிலக்குப்பிரிவு போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். இதில், மது விற்பனையில் ஈடுபட்ட 27 பேரை கைது செய்து, 331 பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertising
Advertising

Related Stories: