சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

பாபநாசம், ஜன. 28: அய்யம்பேட்டை காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. அண்ணா சிலை அருகில் துவங்கிய பேரணியை அய்யம்பேட்டை காவல்நிலைய ஆய்வாளர் கரிகால் சோழன் துவக்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணியில் அய்யம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஹெல்மெட் அணிவதன் அவசியம், சாலை விதிகளை பின்பற்றுவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அய்யம்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் உமாபதி மற்றும் போலீசார், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Related Stories:

>