அரசு கவின் கல்லூரியில் உணர்வு கலை கண்காட்சி பிப். 3ம் தேதி வரை நடக்கிறது

கும்பகோணம், ஜன. 28: கும்பகோணம் அடுத்த கொட்டையூரில் உள்ள அரசு கவின் கல்லூரியில் விடுதி மாணவர்களின் சார்பில் உணர்வு கலை கண்காட்சி நேற்று துவங்கியது. முதல்வர் அருளரசன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக நகை வடிவமைப்பவர் ஷில்பாமேத்தா பங்கேற்று கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டார். இதில் கல்லூரி விடுதி மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் வண்ணக்கலை, சிற்பக்கலை, காட்சி வழிதொடர்பு ஆகியவைகளில் இருந்து 143 வகையான ஓவியங்கள், 37 வெண்கலம், களிமண் சிற்பங்களை தயாரித்து கண்காட்சியில் வைத்துள்ளனர். கண்காட்சியில் பென்சில், ஆயில் பெயின்ட், அக்ரலிக் கலர் ஆகியவைகளை கொண்டு ஜல்லிக்கட்டு, பாலியல் வன்முறை, நாற்று நடவு செய்வது, தெரு கூத்துகள், பல்லக்கு தூக்கி செல்லுதல், அன்றாடம் நடைபெறும் நிகழ்வு, உணர்ச்சிகளை வெளிகொண்டு வரும் ஓவியங்கள், பொம்மலாட்டம் உள்ளிட்ட சிற்பங்களை வடிவமைத்திருந்தனர். இந்த கண்காட்சி பிப்ரவரி 3ம் தேதி வரை நடக்கிறது. விடுதி மாணவர்கள் நிர்வாகி ஹரிபிரசாத் நன்றி கூறினார்.

Related Stories: