தஞ்சாவூர், ஜன.12: தஞ்சை கரந்தை பகுதி திமுக, மாநகர மத்திய மாவட்டம் சார்பில் திராவிட பொங்கல் திருவிழா பள்ளி அக்ரஹாரம் ஹரி நகரில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேகரன் தலைமை வகித்தார். தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம், மாநகர செயலாளர், மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கரந்தை பகுதி செயலாளர் கார்த்திகேயன் வரவேற்றார்.
திமுக மகளிர் அணி பெண்கள் திராவிட பொங்கல் வைத்து கொண்டாடினர். விழாவையொட்டி இளைஞர்களுக்கு கபடி போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் டி.கே. ஜி.நீலமேகம், மேயர் சண்.ராமநாதன் பரிசுகளை வழங்கினர். மேலும், சிலம்பாட்டம் போட்டியில் ஏராளமான சிறுவர் சிறுமிகள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேயர் சண். ராமநாதன் சிலம்பம் சுற்றி சிறுவர்களை உற்சாகப்படுத்தினார்.
நிகழ்ச்சியில், மண்டல குழு தலைவர்கள் ரம்யா சரவணன், எழில், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், புண்ணியமூர்த்தி, தர்மராசன், பகுதி செயலாளர்கள் மேத்தா, நீலகண்டன், மாமன்ற உறுப்பினர்கள் செந்தமிழ் செல்வன், ரேவதி கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கரந்தை பகுதி அவைத் தலைவர் கணேசன் நன்றி கூறினார்.
