மாறனேரி ஆரம்ப சுகாதார நிலையத்தை சீரமைக்க கோரி ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளி, ஜன.8: தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டம் மாறனேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, இந்திய கம்யூனிஸ்ட் பூதலூர் வடக்கு ஒன்றியம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, கட்சியின் கிளைச் செயலர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலர் சக்திவேல், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் சீனி.முருகையன், கண்ணகி, ஒன்றிய செயலர் ஸ்ரீதர், ஒன்றிய குழு உறுப்பினர்கள் சம்சுதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் அப்போது, மாவட்ட செயலர் சக்திவேல் பேசுகையில்:

மருத்துவமனைக்கு போதுமான அடிப்படை வசதி செய்து தரவில்லை, மாறனேரி பள்ளிக்கூடம் முன்பாக உள்ள சாக்கடை, பேருந்து நிறுத்தம் சுகாதாரக் கேடாக உள்ளது. இதனால் பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர். இதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றார். கோரிக்கைகளை உடனடியாக மாவட்ட நிர்வாகமும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் சீர்படுத்தாவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

 

Related Stories: