நாகர்கோவிலில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி எஸ்.பி துவக்கி வைத்தார்

நாகர்கோவில், ஜன.28: நாகர்கோவிலில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாகன பேரணியை எஸ்.பி ஸ்ரீநாத் தொடங்கி வைத்தார். 31 வது சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி நாகர்கோவில், வடசேரி, ஆம்னி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து விழிப்புணர்வு வாகன பேரணி நடைபெற்றது. இதில் இரு சக்கர வாகன ஓட்டிகள், 4 சக்கர வாகன ஓட்டிகள் வாகனங்களுடன் கலந்துகொண்டனர். ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளை சேர்ந்த நிர்வாகிகள், வாகனங்களுடன் பங்கேற்றனர். குமரி மாவட்ட எஸ்.பி நாத் வாகன பேரணியை தொடக்கி வைத்தார். வாகன பேரணி கிருஷ்ணன்கோவில், வெட்டூர்ணிமடம், கல்லூரி சாலை, வடசேரி வழியாக அப்டா மார்க்கெட் பகுதியை சென்றடைந்தது. தொடக்க நிகழ்ச்சியில் நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர், இன்ஸ்பெக்டர் சக்திவேல், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அருள், எஸ்.ஐ சுரேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் ஹெல்மெட் அணிந்தும், 4 சக்கர வாகனத்தில் சென்றவர்கள் சீட் பெல்ட் அணிந்தும் பேரணியில் பங்கேற்றனர். சுமார் 150க்கும் மேற்பட்ட வாகனங்களுடன் இந்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.

Related Stories: