கறம்பக்குடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கறம்பக்குடி, ஜன.24: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதி நகர் பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக மெயின் சாலைகளில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மூலமாக ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளதாக நெடுஞ்சாலைதுறை மற்றும் பேரூராட்சி அலுவலகத்தில் பல்வேறு மனுக்கள் வந்துள்ளது. குறிப்பாக திருமண நாட்களில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டதை அடுத்து தினகரன் நாளிதழில் செய்தி வெளி வந்துள்ளது.

அதையடுத்து நெடுஞ்சாலைதுறை, பொதுப்பணி துறை, வருவாய் துறை சார்பாக நேற்று காலை கறம்பக்குடி- புதுக்கோட்டை சாலை முருகன் கோயில் அருகில் இருந்து கடை ஆக்கிரமிப்புகளை கறம்பக்குடி காவல் துறையினர் மூலமாக அகற்றினர். இதில் புதுக்கோட்டை நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் சரவணன் மற்றும் உதவி பொறியாளர் அப்துல் ரகுமான் மற்றும் வருவாய் துறை கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னிலையில் மற்றும் பொதுப்பணிதுறை அலுவலர்கள் ஆகியோர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கறம்பக்குடி இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியன் தலைமையில் கறம்பக்குடி காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: