சம்பா அறுவடை துவங்கியதால் நெல்கொள்முதல் நிலையங்களை விரைந்து திறக்க வேண்டும் தலைஞாயிறு ஒன்றியக்குழு தலைவர் கோரிக்கை

வேதாரண்யம், ஜன.24: வேதாரண்யம் மற்றும் தலைஞாயிறில் இந்தஆண்டு மானாவாரி மற்றும் ஆற்றுப்பாசன பகுதிகளில் சுமார் 24 ஆயிரம் எக்டேர் சம்பா சாகுபடி நடைபெற் உள்ளது. பருவமழை நன்றாக பெய்து தற்போது நெல் அறுவடை பணி தொடங்கும் நிலையில் உள்ளது. பல இடங்களில் நெற்பயிர்களில் புகையான் தாக்குதல் தோகை புழுக்கள் தாக்கல் அதிகளவில் காணப்படுகிறது. கடந்த வாரம் பெய்த திடீர் மழையால் சில இடங்களில் நெற்பயிர்கள் சாய்ந்து பாதிப்பிற்குள்ளாகியது. இதனால் விவசாயிகள் சாய்ந்த கதிர்களை முதலில் அறுவடை செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் நாகை, திருவாரூர் மாவட்டத்தில் சம்பா அறுவடை பணிகள் தற்போது துவங்கப்பட்டுள்ளது.

வழக்கமாக இந்த சீசன் காலத்தில் வெளியூர்களிலிருந்து சம்பாஅறுவடை பணிக்கு அறுவடை இயந்திரங்கள் இப்பகுதிக்கு அதிகளவில் வரும்.

இதனால் அறுவடை இயந்திரங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் அறுவடை பணிக்கு அரசு சார்பில் உள்ளஅறுவடை இயந்திரங்களை எதிர்பார்த்து காத்துள்ளனர். அறுவடை துவங்கும் இந்த நேரத்தில் அறுவடையான நெல்லை உடனடியாக நெல்கொள்முதல் நிலையத்தில் விற்பதற்கு ஏதுவாக அனைத்து நேரடிநெல் கொள்முதல் நிலையங்களையும் உடனடியாக திறக்க வேண்டும் எனஅரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: