செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்றும், நாளையும் கால்நடைகளுக்கு இனப்பெருக்க முகாம்

செங்கல்பட்டு, ஜன.24: செங்கல்பட்டு கலெக்டர் ஜான்லூயிஸ் வெளியிட்டுள்ள அறிக்கை. தமிழக அரசு சார்பில் இலவச கறவை பசுக்கள், வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் வழங்கப்படுகிறது. இலவச கறவை பசுக்கள், வெள்ளாடுகள், செம்மறி  ஆடுகள் வழங்கும் திட்டத்தின் மூலம் பயன்பெறும் பயனாளிகளை ஊக்கப்படுத்தும் பொருட்டு கால்நடைகளை சிறப்பாக பராமரித்தவர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளில் தமிழ் புத்தாண்டு தினத்தில் பரிசுகளும் வழங்கப்பட்டுள்ளன.

இலவச கறவை பசுக்கள், வெள்ளாடுகள், வழங்கும் திட்டங்கள் மூலம் வழங்கப்பட்ட கறவைப் பசுக்களின் பால் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகளின் எடையை அதிகரிக்கவும், செங்கல்பட்டு  மாவட்டத்தில் இன்றும், நாளையும் கறவை பசுக்களுக்கு இனப்பெருக்க மருத்துவ பரிசோதனையும், வெள்ளாடு, செம்மறி ஆடுகளுக்கு, குடற்புழு நீக்க முகாம் நடைபெற உள்ளது.

இலவச கறவை பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள், வழங்கும் திட்டங்களின் மூலம் பயனடைந்தவர்கள் மட்டுமின்றி அனைத்து விவசாயிகளும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். கால்நடைகளுக்கான  முகாம்,  திருக்கழுகுன்றம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த, நத்தம் கிராம ஊராட்சியில் தொடங்கப்பட உள்ளது என கூறப்பட்டுள்ளது.

Related Stories: