புதர்களை அகற்றிய கன்னியாகுமரி ஜவான்ஸ்

திங்கள்சந்தை, ஜன. 23: கன்னியாகுமரி ஜவான்ஸ் அமைப்பினரின் 25 வது தூய்மை மற்றும் பசுமை நிகழ்சி இரணியல் கோட்டையில் நடைபெற்றது.3500  இன்னாள்  மற்றும் முன்னாள் பாதுகாப்புப்படைவீரர்களை உறுப்பினர்களாகக் கொண்ட கன்னியாகுமரி ஜவான்ஸ் குழுவினரின் 25 வது வெள்ளி விழா  நிகழ்ச்சியாக  புராதான நினைவுச்சின்னங்களை பராமரிக்க முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து  அழிவின் விழிம்பில் நிற்கும் இரணியல் கோட்டையின் சுற்றுபுறத்தை  ஆக்கிரமித்திருந்த புதர்களை அகற்றி சுத்தம் செய்து  அதன் வளாகத்தில்  மரங்களை நட்டனர். மேலும் பராமரிப்புகள் தேவைப்படும் இன்னும் பல நினைவுச்சின்னங்களையும் சீரமைக்க கன்னியாகுமரி ஜவான்ஸ்  குழு முடிவு செய்துள்ளது. மேலும் நமது புராதான  இடங்கள், கோட்டைகள் மற்றும் சின்னங்கள் அழிந்து விடாமல் பாதுகாத்து  அவற்றைப் பற்றிய வரலாறுகளை நாடறிய செய்வது எமது கடமை மட்டுமல்லாது  அனைவரின் கடமையாகும் என கன்னியாகுமரி ஜவான்ஸ் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் கன்னியாகுமரி ஜவான்ஸுடன் இரணியல் மற்றும்  சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த  இளைஞர்கள், பொதுமக்கள் கலந்து  கொண்டனர்.

Related Stories: