சிவகங்கையில் குடியுரிமை சட்டத்தை கண்டித்து மாபெரும் பேரணி, பொதுக்கூட்டம் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

சிவகங்கை, ஜன. 22: சிவகங்கையில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் மாபெரும் பேரணி, பொதுக்கூட்டம் நடந்தது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பே்கேற்றனர். மத்திய பிஜேபி அரசின் குடியுரிமை சட்டத்தை கண்டித்தும், இச்சட்டத்தை வாபஸ் பெற கோரியும் சிவகங்கையில் நேற்று இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் அம்பேத்கர் சிலையில் இருந்து நேரு பஜார் வழியாக அரண்மனை வாசல் வரை பேரணி நடந்தது. பின்னர் சண்முகராஜா கலையரங்கில் பொதுக்கூட்டம் நடந்தது. ஜமாத்துல் உலமா சபை மாவட்ட தலைவர் முகம்மதுரிழாபாகவி தலைமை வகித்தார். ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் அபுபக்கர்சித்திக், கலீல்ரகுமான் முன்னிலை வகித்தனர். உலமா சபை மாவட்ட செயலாளர் முகம்மது இப்ராகிம் வரவேற்றார். முன்னாள் எம்எல்ஏகள் ராஜசேகரன், குணசேகரன், மனித நேய மக்கள் கட்சி மாநில செயலாளர் அப்துல்சமது, எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக், மார்க்சிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், மனிதநேய ஜனநாயக கட்சி மாநில பொருளாளர் ஹாரூண்ரசீது ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

சென்னை தலைமை இமாம் முகம்மதுமன்சூர் நிறைவுரையாற்றினார். காங்கிரஸ் மாவட்டத்தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்ட செயலாளர் வீரபாண்டியன், திமுக மாவட்ட துணை செயலாளர் மணிமுத்து, வழக்கறிஞரணி அமைப்பாளர் ஆதிஅழகர்சாமி, நகர் செயலாளர் துரைஆனந்த், ஒன்றிய செயலாளர்கள் ஜெயராமன், முத்துராமலிங்கம் மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்பு நிர்வாகிகள், பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் என  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பேரணியில் 650 மீட்டர் நீளமுள்ள தேசிய கொடி கொண்டு வரப்பட்டது. குடியுரிமை சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவகங்கை நேருபஜார், அரண்மனைவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

Related Stories: