இன்று மாநகராட்சி குறைதீர் முகாம்

மதுரை, ஜன.21: மதுரை மாநகராட்சி கமிஷனர் விசாகன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை மதுரை மாநகராட்சி மைய அலுவலகத்திலும், மண்டல அலுவலகங்களிலும் மாநகராட்சியின் அழைப்பு மையம், வாட்ஸ்அப், முகநூல் ஆகிய தகவல் தொழில்நுட்ப முறையிலும் புகார்களை வழங்கி வருகின்றனர்.இன்று 21ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணி முதல் 12 மணி வரை மண்டலம்-3 அலுவலகத்தில் சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டுவரி பெயர் மாற்றம், புதியவரி விதித்தல், கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு உள்ளிட்ட தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெறலாம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: