உசிலம்பட்டியில் திமுக யூனியன் சேர்மன் பதவியேற்பு

உசிலம்பட்டி, ஜன.21: உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய சேர்மனாக திமுகவின் ரஞ்சனிசுதந்திரம் நேற்று பதவியேற்றார். திமுக முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா, மாவட்டசெயலாளர் மணிமாறன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். யூனியன் துணைச்சேர்மனாக பாண்டி பொறுப்பேற்றார். இதில் ஒன்றியசெயலாளர் சுதந்திரம், நகரச்செயலாளர் தங்கமலைப்பாண்டி, மாநில செயற்குழு உறுப்பினர் சோலைரவி, முன்னாள் யூனியன் சேர்மன் எஸ்.ஓ.ஆர்.தங்கப்பாண்டி, மாவட்டகவுன்சிலர் துணைத்தலைவர் முத்துராமன், சேடபட்டி யூனியன் சேர்மன் ஜெயச்சந்திரன், மாவட்டசெயலாளர் நெசவாளர் அணி லிங்கசாமி, வழக்கறிஞர் பிரிவு சேதுராமன், செல்லம்பட்டி ஒன்றியசெயலாளர் சுதாகரன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் கவுன்சிலர்கள், ஊராட்சிமன்ற தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், யூனியன் ஆணையாளர் தாமோதரன் மற்றும் அலுவலக பணியாளர்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: