கேந்தி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

திருப்பரங்குன்றம், ஜன.21: திருப்பரங்குன்றம் பகுதியில் கேந்தி பூ சாகுபடியில் விவசாயிகள்  ஆர்வம் காட்டுகின்றனர். திருப்பரங்குன்றம் அருகில் உள்ள கிராமங்களில் மல்லிகை பூ சாகுபடி செய்வது வழக்கம். அதேபோல்  வெண்டை, வெங்காயம் உள்ளிட்ட காய்கறி பயிர்களும் பயிரிடப்படுவது வழக்கம். ஆனால் அக்டோபர் முதல் ஜனவரி வரையிலான காலங்களில் மல்லிகைப்பூ வரத்து குறைவதால் மேலும் மழை உள்ளிட்ட காரணங்களால் வெங்காயம் போன்ற தோட்ட பெயர்கள் நோய் தாக்குதலால்  பாதிக்கப்படுகின்றன. எனவே இந்த நான்கு மாத காலங்களில் ஏற்படும் நஷ்டத்தில் இருந்து  தற்காத்துக்கொள்ள ஒரு சில விவசாயிகள் கேந்தி பூ பயிரிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த கேந்தி பூ நாற்று நடப்பட்ட 45 நாட்களில் மகசூல் தரக்கூடியது.  

இதனை 45 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை சாகுபடி செய்ய முடியும். ஒரு ஏக்கருக்கு ஒரு நாளைக்கு சுமார் நூறு முதல் 150 கிலோ வரை மகசூல் கிடைக்கும். ஒரு கிலோ பூ 20 முதல் 40 ரூபாய் வரை விற்பனையாகும். இதனால் தற்போது திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள விவசாயிகள் கேந்தி பூ சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

Related Stories: