பாதையை ஆக்கிரமித்த அதிமுக பிரமுகர் தரையில் புரண்டு கதறி அழுத பெண்

மதுரை, ஜன.21: பாதை ஆக்கிரமிப்பு தொடர்பாக புகார் மனு கொடுக்க வந்த பெண் திடீரென்று தரையில் படுத்து உருண்டு கதறி அழுததால் கலெக்டர அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் மணியஞ்சியை சேர்ந்தவர் அண்ணாமலை மனைவி ஆனந்தி. இவர் நேற்று தனது 3 பிள்ளைகளுடன் கலெக்டர் அலுவலகம் வந்தார். தான் குடியிருக்கும் வீட்டிற்கு நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மனு கொடுக்க வந்த இவர், திடீரென்று மக்கள் குறைதீர் அரங்கு முன் அமர்ந்தார். பின்னர் அவர், “எங்களுக்கு பாதுகாப்பு இல்லை, அடிப்படை வசதி இல்லை. புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை” என கதறி அழுது, கூச்சல்போட்டு, தரையில் உருண்டு புரண்டார். இதனை பார்த்த அதிகாரிகள் வேகமாக வெளியே வந்தனர். இதுதொடர்பாக ஆர்டிஓ பி.ஏ. சிவக்குமார் அப்பெண்ணிடம் கேட்டறிந்தார்.

Advertising
Advertising

பின்னர் அந்த பெண், கலெக்டர் வினயிடம் கொடுத்த புகார் மனுவில், ‘‘சில ஆண்டுகளுக்கு முன் கிராமத்தில் எனது தந்தை மந்தைசாமிக்கு தொகுப்பு வீடு கொடுத்தனர். அந்த வீட்டில் எனது அம்மாவுடன் நான் மற்றும் குழந்தைகள் வசித்து வருகிறோம். அந்த வீட்டிற்கு, செல்லும் நடைபாதையை எங்கள் வீடு அருகே உள்ள பிச்சை வீடு அருகே அமைத்து கொடுத்தனர்.  இந்நிலையில் அந்த நடைபாதையை அதிமுகவை சேர்ந்த பிச்சை ஆக்கிரமித்து அடைத்துக்கொண்டார். இதனால் பாதையின்றி வெளியே செல்ல முடியவில்லை. குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை.

அலங்காநல்லூர் போலீசில் புகார் கூறியும் நடவடிக்கை இல்லை” என தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக மதுரை ஆர்டிஓ விசாரிக்க கலெக்டர் பரிந்துரை செய்தார். மதுரை கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்த தரையில் படுத்து உருண்டு கூச்சல் போட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: