தி.மு.க. பொங்கல் விழா ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி

கோவை, ஜன. 21:  கோவையில் நடந்த தி.மு.க. பொங்கல் விழாவில், நலத்திட்ட உதவிகளை கார்த்திக் எம்.எல்.ஏ. வழங்கினார். கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி மற்றும் 80-வது வட்ட தி.மு.க. சார்பில் பொங்கல் விழா, ராஜவீதி மாசாணியம்மன் கோவில் அருகில் நேற்று நடந்தது. வார்டு செயலாளர் சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். பொறியாளர் அணி ஜெயக்குமார்  முன்னிலை வகித்தார். இதில், மாநகர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கார்த்திக்  எம்.எல்.ஏ. கலந்துகொண்டு, தி.மு.க. கொடி ஏற்றிவைத்தார். பின்னர், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார். விழாவில், மாநகர் மாவட்ட தி.மு.க. பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நாச்சிமுத்து, மெட்டல் மணி, மனோகரன், முருகன், செல்வராஜ், சோமு, முருகேசன், சுரேஷ் நாராயணன், பி.முருகன், ஹைவேஸ் தண்டபாணி, ஜார்ஜ், கண்ணன், ராமமூர்த்தி, டவுன் ஆனந்த், பன்னீர்செல்வம், மெடிக்கல்  ரங்கராஜ், ஜிம் பிரவீண், குமார், ஜிதேந்திரன், முத்தழகன், துரை.பிரவீண், பாலன்,  சண்முகம், விக்னேஷ், அமுதா, விஷால், நடராஜ், தாடி ரவி உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertising
Advertising

Related Stories: