ஆணையர் எச்சரிக்கை சீர்காழி அருகே பனமங்கலத்தில் கோழியை வேட்டையாட வந்த 5 அடி நீள கருநாகம் பிடிபட்டது

சீர்காழி, ஜன.21:சீர்காழி அருகே பனமங்கலத்தில் கோழியை வேட்டையாட வந்த 5 அடி நீள கருநாகப்பாம்பு பிடிபட்டது. சீர்காழி அருகே பனமங்கலம் நடுத்தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (38). இவரது வீட்டின் பின்பக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள கோழிப்பண்ணையில் 5 அடி நீளமுள்ள அபூர்வ வகை கரு நாகப்பாம்பு புகுந்து கோழி முட்டைகளை விழுங்கி, இரண்டு கோழிகளை கடித்தது மட்டுமின்றி, அதில் ஒரு கோழியை விழுங்க முற்பட்டது. அப்போது கோழிப்பண்ணை வைத்திருக்கும் மணிகண்டன் கரு நாக பாம்பை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனே பாம்பு பிடிப்பதில் வல்லவரான பாண்டியனுக்கு தகவல் கொடுத்ததின் பேரில் அங்கு வந்த பாண்டியன் கருநாகப் பாம்பை லாபமாக பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தார். இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் அந்த அபூர் கரு நாகப்பாம்பை வனப் பகுதிக்கு எடுத்து சென்று விட்டனர். அழிந்துவரும் அபூர்வ வகை பாம்புகளில் கருநாகமும் ஒன்றாக கருதப்படும் நிலையில், பணமங்கலம் கிராமத்தில் பிடிபட்ட கருநாகப் பாம்பை கிராம மக்கள் வியப்புடன் பார்த்து சென்றனர்.

Related Stories: