அரிமளத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குதிரை வாகனத்தில் சுவாமி வீதியுலா

திருமயம், ஜன.20: அரிமளத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற சாமி ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பாலுடையார்கோயில் திருவீதி உலா வருடம் தோறும் பொங்கலைமுன்னிட்டு நடைபெறுவதுவழக்கம். இதற்காக அரிமளம் கூத்தான் தெருவில் சிறியகுடில் அமைக்கப்படும். பின்னர் ஜெயவிளங்கி அம்மன் கோயிலில் இருந்து பாலுடையார் சிலை எடுத்துச் செல்லப்பட்டு குடிலில் வைத்து பக்தர்கள் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபடுவர். இதனைத் தொடர்ந்து நேற்றுமுன்தினம் மாலை 6 மணிக்கு மின்விளக்கு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட குதிரை வானகத்தில் பாலுடையார்சிலை வைக்கப்பட்டு காளைமாடு வாகனத்தில் ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்டது. இந்நிலையில் ஊர்வலம் கூத்தன் தெரு, பாண்டியன் தெரு, பழையசந்தைப்பேட்டைரோடு, மீனாட்சிபுரம் வீதி, அக்ரஹாரம் வழியாக வந்து விளங்கியம்மன் கோயிலை நள்ளிரவு வந்தடைந்தது. ஊர்வலம் சென்றவீதி முழுவதும் பாலுடையாரை வரவேற்கும் விதமாக பெண்கள் சாலைமுழுவதும் கலர்கோலமிட்டு, ஆரத்தி எடுத்து வரவேற்றனர். மேலும் வாண வேடிக்கைகள், சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதனைக்காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வந்திருந்தனர்.

Related Stories: