இன்று ஜனவரி 20 ஜான் ரஸ்கின் நினைவுநாள் சேடபட்டி அருகே மங்கல்ரேவு

பேரையூர், ஜன. 20: சேடபட்டி அருகே மங்கல்ரேவு கிராமத்திற்குள் நுழைய முடியாமல் தேங்கி கிடக்கும் சாக்கடை கழிவுநீரால் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவுவதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா, சேடபட்டி ஒன்றியத்திலுள்ளது மங்கல்ரேவு. இந்த கிராமத்தில் காளியம்மன்கோவில் தெரு நுழைவுவாயில் பகுதியில் ஊர்முழுவதும் இருந்து வரக்கூடிய சாக்கடை கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் இந்தப்பகுதியில் குடியிருக்கும் குடியிருப்பு வாசிகள் கொசுக்கடியாலும், சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளதால் இப்பகுதியில் வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டு கிராம மக்கள் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மழைக்காலங்களில் தெரு முழுவதுமே சாக்கடை பெருகிவிடுவதால் வீட்டிற்குள் செல்லவே முடியாமல் இப்பகுதி பொதுமக்கள் சுகாதாரம் இன்றி வசிக்கின்றனர்.

இது சம்மந்தமாக பலமுறை ஊராட்சி நிர்வாகம் மற்றும் யூனியன் நிர்வாகத்திற்கு இந்த கிராம மக்கள் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் இந்த புகார் மீது இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. ஆனால் பல வருடங்மாக இந்தப்பகுதியில் உள்ள ஓடை மற்றும் கால்வாயில் சாக்கடை சென்று கொண்டிருந்தது. ஆனால் இப்பகுதியிலுள்ள தனிநபர் ஒருவர் சாக்கடை செல்லும் வாய்க்காலை முற்றிலும் மண் போட்டு மூடிவிட்டார். இது சம்மந்தமாகவும் பலமுறை அதிகாரிகளுக்கு புகார் கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. பலமுறை புகார் கொடுத்தும் சாக்கடையை அகற்றாமல் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியலில் ஈடுபடப்போவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

பொது

* தொழில் திட்ட அறிக்கை தயாரித்தல்: மடீட்சியா அரங்கம், காலை 10 மணி, சிறப்புரை: மாயதேவர் (இணை இயக்குனர், இன்ஜினியரிங், ஓய்வு, தொழிற்சாலை மற்றும் வணிகவியல் துறை.

ஆன்மிகம்

* கீதை வகுப்பு: ஆயிர வைசியர் துவக்கப்பள்ளி, தெற்கு ஆவணி மூல வீதி, மாலை 6.45 மணி, பேசுபவர்: சுவாமி சமானந்தர்.

சொற்பொழிவு

* மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, இரவு 7 மணி, ெபாருள்: திருமந்திரம், பேசுபவர்: செ.திருமாவளவன்.

* செல்வ விநாயகர் ஆலயம், ரயில்வே காலனி, இரவு 7 மணி, பொருள்: சித்தர்களின் ஆன்மிகம், பேசுபவர்: இளங்கோ சுவாமி.பெண்ணிடம் நகை, பணம் திருட்டு கன்னியாகுமரி மாவட்டம், ஆலடி குமாரன் குடிவில்லாவை சேர்ந்தவர் ரவிசெல்வகுமார். இவரது மனைவி ஹெலன் செல்வி (48). இவர், கடந்த 17ம் தேதி மாட்டுத்தாவணி பஸ் நிலையம் வந்தார். அங்கு தனது பேக்கை, காத்திருப்போருக்கான இருக்கையில் வைத்துவிட்டு, அருகில் உள்ள கழிவறைக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது அந்த பேக்கை காணவில்லை. அதில் 9 பவுன் தங்க நகைகள், ரொக்கம் ரூ.20 ஆயிரம்  இருந்ததாக கூறப்படுகிறது.  இதுகுறித்து ஹெலன் செல்வி அண்ணாநகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இளம்பெண் மாயம்

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் குமார். இவரது மகள் சண்முகப்பிரியா (18). இவர் மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள ஒரு கண் மருத்துவமனையில் தங்கி பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் பொங்கல் விடுமுறைக்கு வீட்டுக்கு வந்த சண்முகப்பிரியா, கடந்த 17ம் தேதி வேலைக்கு செல்வதாக கூறி வீட்டிலிருந்து புறப்பட்டார். ஆனால் வேலைக்கும் செல்லவில்லை, வீட்டிற்கும் திரும்பி வரவில்லை. உறவினர் மற்றும் தோழிகள் வீடுகளில் தேடிப்பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து குமார் அண்ணாநகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். 

Related Stories:

>