சிறப்பு பிரார்த்தனை

வத்திராயிருப்பு, ஜன. 19:  வத்திராயிருப்பு அருகே, குடியிருப்பு சட்டத்தை ரத்து செய்யக்கோரி, முஸ்லீம்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.  

வத்திராயிருப்பு அருகே, கூமாப்பட்டி பகுதியில் உள்ள தைக்காத் தெரு, காயிதே மில்லத் தெரு, ரகுமத் நகர், அன்சாரி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 1500க்கும் மேற்பட்ட முஸ்லீம் குடும்பத்தினர் உள்ளனர்.இந்நிலையில், மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரியும், இச்சட்டத்தினால் முஸ்லீம்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்கவும், கூமாப்பட்டி ஜமாத் சார்பில் இறைவனிடம் வேண்டி நேற்று ஒருநாள் சிறப்பு நோன்பை கடைப்பிடித்தனர்.

இதையடுத்து நேற்று அதிகாலை 2 மணியிலிருந்து 4.30 மணிக்குள் கூமாப்பட்டி முஸ்லீம் ஜமாத் சார்பில் பள்ளிவாசலில் ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. நேற்று அதிகாலை விரதத்தை 4.30 மணிக்கு தொடங்கிய முஸ்லீம்கள் மாலை 6.30 மணிக்கு நோன்பு கஞ்சி வீட்டும், வீட்டுக்கு வழங்கி விரதத்தை முடித்தனர். முன்னதாக மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பள்ளிவாசலில் சிறப்பு பிராத்தனையில் ஈடுபட்டனர். முஸ்லீம் பெண்கள் தனி அறையில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

Related Stories: