பொங்கல் விடுமுறை முடிந்தது பயணிகள் கூட்டத்தால் திணறிய தேனி பஸ்நிலையம்

தேனி, ஜன. 19: தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் விழா கடந்த 15 ம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் காணும் பொங்கலுடன் நிறைவடைந்தது. தமிழகத்தில் பொங்கல் விழாவையொட்டி தமிழக அரசு கடந்த 15ம் தேதி முதல் விடுமுறை அறிவித்தது. இதனையடுத்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் உறவினர்களுடன் பொங்கல் விழாவை கொண்டாட அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.

பொங்கல் விடுமுறை இன்றுடன் முடிகிறது. மீண்டும் பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ளது. இதனையடுத்து, விழாவிற்காக வந்த உறவினர்கள் அவரவர் வசிக்கும் ஊர்களுக்கு நேற்று திரும்பி வருகின்றனர். இதனால் பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் மிகுந்துள்ளது. தேனி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமானோர் திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, சென்னை உள்ளிட்ட நகரங்களில் தங்கி தொழில் புரிந்து வருகின்றனர். இப்பகுதிகளில் இருந்து சொந்தமாவட்டமான தேனி மாவட்டத்திற்கு வந்த பொதுமக்கள் நேற்று தேனியில் இருந்து தாங்கள் பணிபுரியும் பகுதிகளுக்கு புறப்பட்டு சென்றனர். இதனால், தேனி புதிய பஸ்நிலையமானது பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

Related Stories: