திருப்புத்தூர் கல்லூரியில் பாரம்பரிய நிகழ்ச்சியுடன் சமத்துவப்பொங்கல் விழா

திருப்புத்தூர், ஜன.14:  திருப்புத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதை அம்மாள் கல்லூரியில் மாணவ, மாணவியர் பாரம்பரிய உடைந்து அணிந்து சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடினர். திருப்புத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதை அம்மாள் கல்லூரியில் சமத்துவப்பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கல்லூரியின் ஆட்சிக்குழு துணைத்தலைவர் சகுந்தலைராஜன் அம்மாள் விழாவினை தொடங்கி வைத்தனர். கல்லூரி செயலர் ஆறுமுகராஜன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். விழாவில் தமிழர்களின் பாரம்பரியத்தை போற்றும் வகையில், மாணவ, மாணவியர்களுக்கு கும்மி, கயிறு இழுத்தல், உறியடித்தல், சிலம்பம், ஒயிலாட்டம், கோலப்போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் மாணவர்கள் வேட்டி சட்டையிலும், மாணவியர்கள் சேலை அணிந்தும் விழாவை சிறப்பித்தனர். இதில் கல்லூரி துணை முதல்வர், இருபால் பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: