எஸ்டிபிஐ கோரிக்கை வெற்றி பெற்றோருக்கு பரிசு வழங்கல் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் பதவியை திமுக கைப்பற்றியது அதிமுகவுக்கு துணைத்தலைவர் பதவி

பாடாலூர், ஜன.14: ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 18 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 9 இடங்களில் திமுகவும், 9 இடங்களில் அதிமுக கூட்டணி கட்சியினர் வெற்றி பெற்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்குமரன் முன்னிலையில் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. அதில் திமுக சார்பில் கிருஷ்ணமூர்த்தி, அதிமுக சார்பில் கர்ணன் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதனையடுத்து தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் இருவருக்கும் தலா 9 வாக்குகள் கிடைத்தன. அதனையடுத்து குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு குலுக்கல் நடைபெற்றது. அதில் திமுக வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி ஒன்றியக்குழு தலைவராக வெற்றிப் பெற்றார்.

அதனையடுத்து மாலை ஒன்றியக்குழு துணைத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. துணைத் தலைவர் பதவிக்கு தி.மு.க சார்பில் சுரேஷ், அ.தி.மு.க சார்பில் சுசீலா ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதனையடுத்து வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் இருவருக்கும் தலா 9 வாக்குகள் கிடைத்தன. அதனையடுத்து குலுக்கல் முறையில் தேர்வு செய்யப் படுவதாக அறிவிக்கப்பட்டு குலுக்கல் நடைபெற்றது. அதில் அ.தி.மு.க வேட்பாளர் சுசீலா ஒன்றியக்குழு துணைத் தலைவராக வெற்றி பெற்றார். ஒன்றியக்குழு தலைவராக வெற்றி பெற்ற கிருஷ்ணமூர்த்தி, துணைத் தலைவராக வெற்றி பெற்ற சுசிலா ஆகியோருக்கு கட்சியினர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories: