சேந்தமங்கலம் திமுக ஒன்றிய குழு தலைவருக்கு பாராட்டு

சேந்தமங்கலம், ஜன.13: சேந்தமங்கலம் ஒன்றியத்தில் உள்ள 9 வார்டுகளில், திமுக 6 வார்டுகளில் வெற்றி பெற்று ஒன்றியத்தை கைப்பற்றியது. இதையெடுத்து ஒன்றிய குழு தலைவர் தேர்தலில், திமுகவை சேர்ந்த மணிமாலா சின்னுசாமி, துணைத்தலைவராக 4வது வார்டை சேர்ந்த உறுப்பினர் கீதா வெங்கடேசன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். ஒன்றிய குழு உறுப்பினர்கள் சரசு, சுபாஷினி, சித்ரா, சுயேட்சை உறுப்பினர் சண்முகம் ஆகியோருக்கு பாராட்டு விழா சேந்தமங்கலம் ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளரும், முன்னாள் ஒன்றிய குழு தலைவருமான அசோக்குமார் தலைமை தாங்கி, தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜேஸ்குமார், நகர செயலாளர் தனபாலன், பேரூர்  செயலாளர் நடசேன், இளைஞரணி துணை அமைப்பாளர் கதிர்வேல், முன்னாள் பேரூராட்சி தலைவர் பெரியசாமி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் விஸ்வா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: