சேந்தமங்கலம் வட்டாரத்தில் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு முகாம்

சேந்தமங்கலம், ஜன.13: சேந்தமங்கலம் வட்டாரத்தில் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உள்ளடங்கிய கல்வி திட்டத்தின் கீழ், சேந்தமங்கலம் வட்டாரத்தில் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது. பயிற்சிக்கு சேந்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் முத்துசாமி தலைமை தாங்கினார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் பிரபு முன்னிலை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் செல்வி, பயிற்சியை தொடங்கி வைத்தார். பயிற்சியில் வீட்டு வழிக்கல்வி பயிலும் மாற்றுத்திறனுடைய குழந்தைகள், பள்ளி ஆயத்த பயிற்சி ஆதார வள மையங்களுக்கு வரும் மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றோர்கள் 25 பேர் கலந்துகொண்டனர்.  மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான சட்டங்கள் மற்றும் அரசின் உதவித் திட்டங்கள் குறித்து விளக்கி கூறப்பட்டது.

மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு தொடர்ந்து பயிற்சி அளிப்பதன் அவசியம் குறித்து, பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு  ஏற்படுத்தும் பொருட்டு இப்பயிற்சி நடத்தப்பட்டது. இதில், பயிற்சியின் மூலம் நன்கு முன்னேற்றம் அடைந்த குழந்தைகளின் பெற்றோர்கள், தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இப்பயிற்சியில் வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளர் கௌரி, சிறப்பு பயிற்றுநர்கள் யோகராஜ் மற்றும் முடநீக்கியல் நிபுணர் சௌந்தர்யா ஆகியோர் கருத்தாளர்களாக பயிற்சி அளித்தனர்.

Related Stories: