ஆவடி, ஜன.13: ஆன்லைனில் விளம்பரத்தை பார்த்து, ஆவடி அருகே காரை வாடகைக்கு எடுத்து மோசடி செய்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர். ஆவடி அடுத்த முத்தாபுதுபேட்டை, சபி நகரைச் சேர்ந்தவர் முத்துராணி (26). அதே பகுதியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தன்னிடம் உள்ள காரை வாடகைக்கு விடுவதற்காக, ஆன்லைன் மூலம் விளம்பரம் செய்து இருந்தார். அதனை பார்த்து சென்னை, அயனாவரத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் முத்துராணியை நேரில் பார்த்து அறிமுகம் செய்துள்ளார். பின்னர், அவர் முத்துராணியிடம் நாள் வாடகையாக ₹1,500 தருவதாக கூறி காரை எடுத்து சென்றார். ஆனால், அதன்பிறகு அவர் கூறிய படி காருக்கு வாடகை பணத்தை தராமல் இழுத்தடித்து வந்துள்ளார்.