சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் பழுதடைந்த மின்விளக்குகளை சீரமைக்க கோரிக்கை

 

புழல், ஏப். 29: மாதவரம் ரவுண்டானா, ஜிஎன்டி சாலை, மாதவரம், ரெட்டேரி, புழல் சைக்கிள் ஷாப், புழல் மத்திய சிறைச்சாலை, காவாங்கரை, தண்டல்கழனி, செங்குன்றம், பைபாஸ் சாலை, திருவள்ளூர் கூட்டுச் சாலை, மொண்டியம்மன் நகர், பாடியநல்லூர், நல்லூர் சுங்கச்சாவடி, சோழவரம் பைபாஸ் சாலை, ஆத்தூர் காரனோடை மேம்பாலம் வரை சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையின் நடுவே வாகன போக்குவரத்திற்காக உயர் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலமாக இரவு நேரங்களிலும் வாகன போக்குவரத்து சீராக இயங்கியது. இந்நிலையில், மாதவரம் முதல் காரனோடை வரை சென்னை-கொல்கத்தா சாலையில் உள்ள மின்விளக்குகள் பழுதாகி உள்ளதால், இருள் சூழ்ந்து காணப்படுகிறது. ஒருசில மின்கம்பங்கள் சிதிலமடைந்து காணப்படுகிறது. பலத்த காற்று வீசினால் உடைந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது.

ஏற்கனவே பாடியநல்லூர் சோதனை சாவடி அருகே சாலையின் நடுவில் உடைந்து விழுந்த மின்விளக்குகள் பராமரிப்பின்றி கிடக்கிறது. சாலை விபத்துகளை தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாதவரம் முதல் காரனோடை வரை சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மின் விளக்குகளை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உரிய நாவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் பழுதடைந்த மின்விளக்குகளை சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: