கரும்பு விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு 12 கிராம ஊராட்சி மன்றங்களில் துணை தலைவர் தேர்தல் நடக்கவில்லை

தஞ்சை, ஜன. 13: தஞ்சை மாவட்டத்தில் 12 கிராம ஊராட்சி மன்றங்களில் துணை தலைவர் தேர்தல் நடக்கவில்லை. தஞ்சாவூர் மாவட்டத்தில் 589 கிராம ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் பட்டுக்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட த.மரவாக்காடு ஊராட்சி தலைவர் பதவிக்கு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யப்படாததால் தேர்தல் நடக்கவில்லை. மற்ற 588 ஊராட்சிகளில் கடந்த 27, 30ம் தேதிகளில் நடந்த தேர்தலில் தலைவர் தேர்வு நடந்தது.

இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களில் துணைத்தலைவர் தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதில் தஞ்சாவூர் ஒன்றியத்தில் காசாநாடு புதூர், ஒரத்தநாடு ஒன்றியத்தில் ஆம்பலாப்பட்டு தெற்கு, கரைமீண்டார்கோட்டை, மூர்த்தியம்பாள்புரம், பொன்னாப்பூர் கிழக்கு, திருவையாறு ஒன்றியத்தில் அம்மையகரம், திருச்சோற்றுத்துறை, பாபநாசம் ஒன்றியத்தில் மணலூர், உம்பளப்பாடி, திருப்பனந்தாள் ஒன்றியத்தில் கஞ்சனூர், பட்டுக்கோட்டை ஒன்றியத்தில் கரம்பயம், கொண்டிக்குளம் ஆகிய 12 ஊராட்சிகளில் துணைத்தலைவர் தேர்தல் நடக்கவில்லை.

இத்தேர்தல் நடத்துவதற்கு போதிய அளவில் உறுப்பினர்கள் இல்லாததால் தேர்தல் நடைபெறவில்லை என கூறப்படுகிறது. ஆனால், ஆள் கடத்தல், அலுவலர் ஒத்துழைப்பின்மை உள்ளிட்ட காரணங்களால் தேர்தல் நடைபெறவில்லை என சில கிராமங்களில் மக்கள் புகார் கூறி வருகின்றனர்.

Related Stories: