செந்துறை ஒன்றியக்குழு தலைவர் பதவி அதிமுக- பாமக நேரடி போட்டி திமுக ஆதரவால் பாமக வெற்றி

அரியலூர், ஜன.12:செந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் தலைவர் பதவிக்கு பாமகவை சேர்ந்த தேன்மொழி, அதிமுகவை சேர்ந்த தெய்வமணி, திமுகவை சேர்ந்த பூங்கொடி ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் திமுக வேட்பாளர் பூங்கொடி தனது மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டார்.

இதனால் கூட்டணிக் கட்சிகளான அதிமுக பாமக இடையே நேரடி போட்டி ஏற்பட்டது. இதில் திமுக உறுப்பினர்கள் பாமகவுக்கு ஆதரவளித்தனர் இதனால் பாமக வேட்பாளர் தேன்மொழி 10 வாக்குகள் பெற்று ஊராட்சி ஒன்றியக் குழு தலைவரானார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக தெய்வமணி 8 வாக்குகள் பெற்றார் ஒரு வாக்கு செல்லாதவையானது.

துணைத்தலைவர் பதவியில் அதிமுகவினர் கலந்து கொள்ளாததால் அம்மா மக்கள் முன்னேற்ற கழக உறுப்பினரான மணிவேலன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இந்த ஊராட்சி ஒன்றியத்தில் தலைவர் தேர்தலில் பாமக திமுகவுடன் இணைந்து வெற்றி பெற்றது மாலையில் நடைபெற்ற துணைத் தலைவர் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக உறுப்பினர் மணிவேலன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: