ரூ.78 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்

வெள்ளகோவில், ஜன.12: வெள்ளகோவில் அடுத்துள்ள முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை டெண்டர் முறையில் தேங்காய் ஏலம் நடைபெறுகிறது.

 ஏலத்தில் முதல் தரம் ஒரு கிலோ ரூ.32.65க்கும், இரண்டாம் தரம் ஒரு கிலோ ரூ.27.15க்கும், சராசரி ரூ.30.65க்கும் ஏலம் போனது.

2.5 டன் தேங்காய்கள் மொத்தம் ரூ.78 ஆயிரத்து 814 க்கு ஏலம் போனது.

ரூ.1.27 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் முத்தூர் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் நேற்று நடந்த ஏலத்தில் 1117 கிலோ தேங்காய் பருப்புகள் வந்திருந்தன.

Related Stories: