திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு

 

திருப்பூர், மே 4: திருப்பூரில் நாடாளுமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்பூர் வடக்கு, தெற்கு, அந்தியூர், பவானி, பெருந்துறை மற்றும் கோபிசெட்டிபாளையம் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள் மற்றும் விவிபேட் வைக்கபப்ட்ட சீலிடப்பட்ட அறைகளில் இருந்து துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார், அரசியல் கட்சியினர் முன்னிலையில் பலத்த பாதுகாப்புடன் வாக்குச்சாவடி வாரியாக வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான, திருப்பூர் எல்ஆர்ஜி கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டது.

வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் அந்தந்த தொகுதிக்குட்பட்ட இடங்களில் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வைக்கப்பட்டு அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டு போலீசார் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். வாக்கு எண்ணும் மையத்தில் 285 கேமராக்கள் ஏற்கனவே பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் நடந்து வந்தது.

இந்நிலையில் நேற்று வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார். அப்போது அரசியல் கட்சியினர் முன்னிலையில் கூடுதலாக மேலும் 8 கண்காணிப்பு கேமராக்கள், டிவி பொருத்தப்பட்டது. இதில் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவின்குமார் அபிநபு, துணை போலீஸ் கமிஷனர் கிரீஸ் யாதவ் மற்றும் மற்றும் அரசியல் கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.

The post திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: