காரை விற்று பணம் மோசடி ஏஜென்சி மேலாளர் பிடிபட்டார்

ஆவடி, ஜன.10 : அம்பத்தூர் தொழிற்பேட்டையில் கம்பெனி மேலாளரின் காரை விற்று பணத்தை கொடுக்காமல் மோசடி செய்த ஏஜென்சி மேலாளரை போலீசார் கைது செய்தனர்.அம்பத்தூர் தொழிற்பேட்டை, 3வது மெயின் ரோட்டில் உள்ள கம்பெனியில் மேலாளராக இருப்பவர் பாலு (54). இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் பாலு, தனக்கு சொந்தமான காரை விற்பனை செய்ய முடிவு செய்தார். இதனையடுத்து அவர், மாங்காடு, சக்கரநகரைச் சார்ந்த ரஞ்சித் கண்ணா (40) என்பவரின் உதவியை நாடினார்.இவர், தனியார் மோட்டார் ஏஜென்சியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். பின்னர், பாலு தனது காரை ரஞ்சித்கண்ணாவிடம் கொடுத்து விற்பனை செய்து பணத்தை தருமாறு கூறியுள்ளார். ஆனால், அவர் காரை விற்று விட்டு 2ஆண்டாக பணத்தை கொடுக்கவில்லையாம்.

மேலும், பாலு காரை திரும்ப கேட்டதற்கும், அவர் கொடுக்க மறுத்து விட்டாராம். இது குறித்து பாலு அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். மேலும், போலீசார் தலைமறைவாக இருந்த ரஞ்சித்கண்ணாவை நேற்று மாலை கைது செய்தனர்.

Related Stories: