ஆரணி, மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியங்களில் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொறுப்பேற்றவுடன் வளர்ச்சி பணிகள் தீவிரம்

ஆரணி, ஜன.10: ஆரணி ஊராட்சி ஒன்றியங்களில் உள்ளாட்சி தேர்தல் முடிந்து, ஊராட்சி தலைவர்கள் பொறுப்பேற்றுள்ள நிலையில் வளர்ச்சி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.ஆரணி தொகுதிக்குட்பட்ட ஆரணி, மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியங்களில் 75 ஊராட்சிகள் உள்ளது. நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கிராம வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் அந்தந்த ஊராட்சி மன்றத்தில் கடந்த 6ம் தேதி பதவியேற்று கொண்டனர்.இந்நிலையில், புதிதாக பதவியேற்றுள்ள கிராம வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊராட்சிகளில் உள்ள அடிப்படை வசதிகள், வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, தெருக்களில் எரியாமல் உள்ள மின்விளக்குகளை மாற்றி புதிய மின்விளக்கு அமைத்தல், குண்டும், குழியுமான சாலைகளில் மண் கொட்டி சமன் செய்தல், பள்ளி வளாகம், கால்நடை மருத்துவமனை வளாகம், அங்கன்வாடி மையங்களில் சூழ்ந்துள்ள செடி, கொடிகள் அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. அதேபோல் ஊராட்சி மன்ற தலைவர்கள் அனைத்து வார்டுகளுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து வார்டு உறுப்பினர்களிடம் கேட்டு பிடிஓவிற்கு அறிக்கை தயார் செய்து அனுப்பியுள்ளனர். இதனால், 3 ஆண்டுகளுக்கு பிறகு கிராமங்களில் வளர்ச்சி பணிகள் துவங்கியுள்ளதால் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: