எஸ்பி அதிரடி நடவடிக்கை வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் திரண்டதால் போக்குவரத்து பாதிப்பு பாதுகாப்பு பணிகள் ஆய்வு நீடாமங்கலம் பகுதியில் வேர்கடலை விதைப்பு பணி மும்முரம்

நீடாமங்கலம், ஜன.3: நீடாமங்கலம் பகுதிகளில் மார்கழி பட்ட வேர் கடலை விதைப்பு பணி மும்முரமாக நடைபெறுகிறது.திருவாரூர்மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள காளாச்சேரி, முன்னாவல்கோட்டை, அய்யம்பேட்டை, எடமேலையூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேர்கடலை, கத்தரி, கீரைவகை, வெண்டை, உளுந்து, மரவள்ளி கிழங்கு உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கிகள், பருப்பு வகைகளை சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பில் சிறு குறு விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.இங்கு விளையும் தானிய வகைகள் மற்றும் கீரை, காய்கள் தங்கள் வீட்டு பயன்பாட்டிற்கு எடுத்து வைத்து கொண்டு, மீதமுள்ளதை மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து மொத்தமாக விற்று காசாக்குகின்றனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள காளாச்சேரி பகுதி வயல்களில் மாடுகட்டி உழவு செய்து விவசாய தொழிலாளர்கள் மூலம் மார்கழி பட்ட வேர்கடலை விதைப்பு பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக விவசாயிகள் கூறுகையில்: பல ஆண்டு காலமாக காளாச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வேர்கடலை, கிழங்கு, உளுந்து போன்ற பல்வேறு வகையான பயிர்கள் சாகுபடி செய்து வருகிறோம். இந்த பயிர்கள் சாகுபடி செய்யும்போது அதிக மழை, பணி பெய்தால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். கடந்த ஆண்டு அடித்த கஜா புயலால் மிகப்பெரிய சேதம் அடைந்து விவசாயிகள் பாதிப்புக்குள்ளானார்கள். இந்த வகையான பயிர் வகைகளை சிறு குறு விவசாயிகளும், பெரும் விவசாயிகளும் குறைந்த அளவே சாகுபடி செய்வதால் ஏற்படும் பெரிய பாதிப்புகளை யாரும் கண்டு கொள்வதில்லை எனவே பாதிப்பு ஏற்படும் நேரத்தில் அரசு தகுந்த நிவாரணம் வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும் என்றனர்.

Related Stories: