பெனடிக்ட் பள்ளியில் பிஎஸ்எல்வி ராக்கெட் விழிப்புணர்வு கண்காட்சி

உத்தமபாளையம், டிச.31: உத்தமபாளையம் அருகே ஆனைமலையன்பட்டி பெனடிக்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிஎஸ்எல்வி ராக்கெட் பற்றிய விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது. உத்தமபாளையம் அருகே ஆனைமலையன்பட்டி பெனடிக்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் சிபி.ஸ்இ பள்ளியில் பிஎஸ்எல்வி ராக்கெட் பற்றிய விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் அறிவியல் தொழில்நுட்பம் பற்றிய விளக்க முகாம் நடந்து வருகிறது. நிகழ்ச்சியை பள்ளியின் தாளாளர் டாக்டர் பீட்டர் தொடங்கி வைத்தார்.

இதில் மறைந்த விஞ்ஞானி அப்துல்கலாம் கண்ட கனவு திட்டமான இந்திய வல்லரசு பற்றிய நுண்னறிவினை இன்றைய தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் வகையில், 40அடி உயரம், மற்றும் இரண்டரை டன் எடையுடன் இந்த ராக்கெட் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதனை பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள், அறிவியல் ஆர்வலர்கள் காலை 7 மணிமுதல் மாலை 5 மணிவரை நேரில் வந்து பார்வையிட்டு செல்லலாம்.  பள்ளியின் தாளாளர் கூறுகையில், `` நமது நாட்டில் பயிலக்கூடிய மாணவர்களின் அறிவியல் தொழில்நுட்ப அறிவினை வளர்த்திடும் வகையிலும், கலாம் கண்ட கனவினை நனவாக்கும் வகையிலும் பிஎஸ்எல்வி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை அனைவரும் கண்டு களிக்கலாம்’’ என்றார்.

Related Stories: