தென்னிந்திய அளவிலான சைக்கிளிங் சீறிப்பாய்ந்த மாணவ மாணவிகள்

கோவை, டிச.30:கோவையில் நடந்த தென்னிந்திய அளவிலான சைக்கிளிங் போட்டியில் பங்கேற்ற மாணவ மாணவிகள் தங்கள் சைக்கிள்களில் மின்னலென சீறிப்பாய்ந்து பந்தய இலக்கை எட்டினர்.கோவை வெஸ்டர்ன் வேலி சைக்கிளிங் கிளப் சார்பில் தென்னிந்திய அளவிலான எம்.டி.பி சேலஞ்ச் சைக்கிள் போட்டிகள் சுண்டக்காமுத்தூரில் நடந்தது. தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். 8,10,12,14,16,18-40,40 வயதிற்கு மேல் என 8 வயது பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. அதேபோல தேசிய அளவில் சிறந்து விளங்கும் சைக்கிளிங் வீரர்களுக்கான எலைட் சைக்கிளிங் போட்டியும், ஆட்டிச குழந்தைகளுக்கான போட்டியும் நடந்தது. போட்டிகளை கோவை மாவட்ட சைக்கிளிங் சங்க துணை தலைவர் கர்ணபூபதி துவக்கி வைத்தார். போட்டிகளில் பங்கேற்ற மாணவ மாணவிகள் தமது திறனை வெளிப்படுத்தும் வகையில் சைக்கிள்களை இயக்கி இலக்கை எட்டினர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன.

 இதுகுறித்து போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், ‘இன்றைய நவீன காலத்தில் இளைய தலைமுறையினருக்கு விளையாட்டு மீதான ஆர்வம் குறைந்து மின்ணணு சாதனங்களில் முடங்கியுள்ளனர். அவர்களுக்கு விளையாட்டு குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தவும், உடலுக்கு ஆரோக்கியம் தரும் சைக்கிளிங்கை அறிமுகப்படுத்தவும் இந்த போட்டி நடத்தப்படுகிறது,’’ என்றனர்

Related Stories: