குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தொண்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

தொண்டி, டிச.30: மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ெதாண்டியில் ஐக்கிய ஜமாத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தையும் கைவிடக்கோரி தொண்டியில் ஐக்கிய ஜமாத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடைபெற்றது. ஐக்கிய ஜமாத் தலைவர் அபுபக்கர் தலைமை வகித்தார். அனைத்து ஜமாத் தலைவர்கள், இஸ்லாமிய இயக்க தலைவர்கள் முன்னிலை வகித்தனர். இந்து பரிபாலன சபை தலைவர் ராஜா, தொண்டி பங்கு தந்தை சவரிமுத்து, பிரசன்னா, சிராஜீதீன் கலந்து கொண்டு பேசினர்.

மத்திய அரசை கண்டித்தும், குடியுரிமை சட்டத்தை கைவிடக் கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இஸ்லாமியர்களை வஞ்சிக்கும் நோக்கில் மத்திய அரசு தொடர்ந்து சட்டம் இயற்றி வருகிறது. இந்திய இரையாண்மைக்கு எதிராக நடக்கும் மத்திய அரசை வன்மையாக கண்டிகிறோம். இந்திய சுதந்திர போராட்டத்தில் இஸ்லாமியர்களின் பங்கு அதிகம் உள்ளது. வரலாற்றை மறைத்து புறம் தள்ள பார்கிறார்கள். அனைவரும் சமம் என்ற நோக்கில் இச்சட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்று பேசினார்கள். இதில் தமுமுக மாநில செயலாளர் சாதிக்பாட்சா, ஜமாத் தலைவர்கள் சாகுல் ஹமீது, இபத்துல்லர் வந்தேனவாஸ் உட்பட சுற்றுவட்டாரத்திலிருந்து ஏராளமானோர் கலந்துகொண்டனர். ஐக்கிய ஜமாத் துணை தலைவர் அப்துல்லா தீர்மானம் வாசித்தார். ஆலிம் அப்துல் ரஹ்மான் நன்றி கூறினார்.

Related Stories: