சம்பை கிராமத்தில் மாணவர்களின் குழுக்களை கலெக்டர் ஆய்வு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் வெண்ணத்தூர் ஊராட்சி ஒன்றியம், சம்பை கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளியில் பள்ளி கல்வி துறையின் மூலம் மாணவர்களின் திறன் மேம்பாட்டை உயர்த்தும் வகையில் மாணவர்கள் குழு அமைத்து செயல்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், மாணவர்களுக்கான உருவாக்கப்பட்ட குழுவை பார்வையிட்டு அவர்களிடம் இக்குழுவின் பயன்கள் குறித்து கேட்டறிந்து தெரிவிக்கையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் திறன் மேம்பாட்டை வெளிக்கொண்டு வரும் வகையில் தற்பொழுது 40 அரசு பள்ளிகளில் அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் சிவப்பு, மஞ்சள், ஊதா, பச்சை என நான்கு வண்ணக்கலர்களில் நான்கு அணிகளாக பிரித்து மாணவ, மாணவிகளின் திறன் மேம்பாட்டை வளர்த்திடும் வகையில் செயல்பட துவங்கி உள்ளன. இந்த நான்கு அணிகளிலும் உள்ள மாணவ,மாணவர்களின் கல்வித்திறன், விளையாட்டு, பொது அறிவு குறித்தும் தங்கள் திறமைகளை வெளிக்கொண்டு வருபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு மேலும் திறனை மேம்படுத்துவதற்கு ஏதுவான பயிற்சிகள் வழங்குவதே இந்த அணிகள் துவங்கியதின் நோக்கமாகும். அந்த வகையில் மாவட்டத்தில் 40 பள்ளிகளில் உருவாக்கப்பட்டு ஆசிரியர் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாணவ,மாணவிகள் நல்ல முறையில் திட்டத்தை பயன்படுத்தி தங்கள் திறனை மேம்படுத்தி தங்கள் சார்ந்த அணிக்கு முதலிடம் பெற்றுத் தரும் வகையில் திறமையை மேம்படுத்த வேண்டுமென தெரிவித்தார்.

Related Stories: